7 நாட்கள் ஆட்டம் அடங்கியது..
கடந்த 7 வேலை நாட்களாக ஆட்டம் போட்ட இந்திய பங்குச்சந்தைகளின் ஆட்டம் சற்றே அடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 132 புள்ளிகள் சரிந்து 69,521 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 36 புள்ளிகள் சரிந்து 20,901 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவுற்றது. வெள்ளிக்கிழமை ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் கூட்டப்பட இருக்கும் சூழலில் இந்திய சந்தைகளில் சரிவு காணப்பட்டது. பங்குச்சந்தையில் கடைசி நேர வர்த்தகம் இந்திய சந்தைகளின் மதிப்பை உயர்த்தின. Bharti Airtel, HUL, ONGC, Apollo Hospitals Tata Steel ஆகிய நிறுவன பங்குகள் சரிவை கண்டன. Power Grid Corporation, Adani Ports, UltraTech Cement, Cipla,Grasim Industries ஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை பதிவு செய்தன. ஆட்டோமொபைல் மற்றும் சுகாதாரத்துறை பங்குகள் அரை விழுக்காடு உயர்ந்தன. எண்ணெய் நிறுவன பங்குகள் 1 விழுக்காடும் உயர்ந்தன. ஆற்றல் துறை பங்குகள் 3 விழுக்காடு உயர்ந்தன. உலோகத்துறை, FMCG துறைபங்குகள் அரை விழுக்காடு விலை குறைந்தன. Tata Power, SpiceJet, Home First, Sandur Manganese, SJVN, NHPC, Dredging Corporation, Torrent Power, Axiscades Technologies, LIC India, Container Corporation, Alembic, Mahanagar Gas, Paisalo Digital, KEI Industries, Himatsingka Seide, JSW Energy உள்ளிட்ட 300க்கும் அதிகமான நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத உயர்வை கண்டன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை முன்தின விலையை விட சவரனுக்கு 40 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. ஒரு சவரன் தங்கம் 46,560 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 5820 ரூபாயாக உள்ளது. இது முன்தின விலையை விட 5 ரூபாய் அதிகமாகும். வெள்ளி விலை ஒரு கிராம் தலா 1 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் 80 ரூபாய்க்கும் , கட்டி வெள்ளி விலை 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும், 3% ஜிஎஸ்டியும் கட்டாயம் சேர்க்கப்படவேண்டும். ஆனால் செய்கூலி, சேதாரம் ஒவ்வொரு கடைக்கும் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தங்கம் வாங்குவது போலவே தங்கப்பத்திரத்தையும் மக்கள் கருத்தில் கொள்ளலாம்