எல்லோர் கண்களும் ரிசர்வ் வங்கி மீதே..
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி பல்வேறு பணிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரிசர்வ் வங்கி தனது கடன்கள் மீதான வட்டி விகிதத்தை தொடர்ந்து 5 முறையாக அப்படியே மாற்றமின்றி நீட்டித்து வருகிறது. உணவுப்பொருள் விலைவாசி உயர்வு என்பது 4 விழுக்காடாகவே தொடர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது. புத்தாண்டு பிறக்கவும் இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அனைவரின் எதிர்பார்ப்பும் ரிசர்வ் வங்கி நடத்த இருக்கும் கொள்கை குழு கூட்டத்தின் மீதே இருக்கிறது. ஏனெனில் அமெரிக்க பெடரல் ரிசர்வ், 2024-ல் கடன்கள் மீதான வட்டிவிகித்ததை குறைக்கப்போவதாக அறிவித்திருந்தது. இதன் எதிரொலியாகவே இந்தியாவிலும் அதே நிலை தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய உணவுப்பொருள் சார்ந்த விலைவாசி என்பது 4விழுக்காடாகவே அடுத்தாண்டு பாதி வரை இருக்கும்பட்சத்தில் அதற்கு பிறகுதான் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நுகர்வோர் பணவீக்க குறியீடு என்பது அக்டோபரில் 4.87%ஆகவும், நவம்பரில் 5.55%ஆகவும் இருந்தது.
எனினும் டிசம்பரில் விலைவாசி உயர்வு எப்படி இருக்கும் என்று தெரியாதததால் திடீரென வட்டி விகிதம் குறைக்க முடியாது என்று அண்மையில் ரிசரவ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் கூறியிருந்தார். டிசம்பர் மாத பணவீக்க தரவுகள் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும் சூழல் நிலவுகிறது. அடுத்தாண்டு தேர்தலும் நடக்க இருக்கும் சூழலில் கொள்கை முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆராய்ந்து எடுக்க இருக்கிறது. 2023-ல் ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையில் எச்டிஎப்சி மற்றும் எச்டிஎப்சி வங்கி ஆகிய நிறுவனங்களின் இணைப்பு வெற்றிகரமாக நடைபெற்றது.