ரிலையன்ஸின் ஒரு பிரிவு வியாபாரத்தை வாங்கும் அம்புஜா குழுமம்…
அம்பானி குடும்பத்தில் இரண்டு பிள்ளைகளில் முகேஷ் அம்பானி வியாபாரத்தில் கொடிகட்டி பறந்தாலும், சகோதரரான ANIL அம்பானியின் பெரும்பாலான வியாபரங்கள் தோல்வியில்தான் முடிந்துள்ளன. இந்த நிலையில் ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் பங்குகள் ஏலத்துக்கு வந்துள்ளன.ரிலையன்ஸ் கேபிடல் நிறுவன பங்குகள் இரண்டு சுற்றுகளாக ஏலமிடப்பட்டுள்ள நிலையில், அம்புஜா குழுமம் ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தை வாங்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. 9650 கோடி ரூபாய் மதிப்பில் இந்த ஏலம் நடக்கிறது. முதல் சுற்று ஏலம் கடந்தாண்டு டிசம்பரில் நடைபெற்றது. அதில் 8640 கோடிக்கு ரிலையன்ஸ் கேபிடலை இண்டஸ் இன்ட் ஹோல்டிங்க்ஸ் என்ற நிறுவனம் வாங்க முன்வந்தது. கடன்காரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்கள் ரொக்கமாக 8 ஆயிரம் கோடி வேண்டுமென்று கூறியிருந்தனர். இந்த நிலையில் இரண்டாவது சுற்று ஏலத்தில் இந்துஜா குழுமம் ஆர்வம் காட்டி வருகிறது. போட்டிக்கு வந்த மற்ற இரண்டு நிறுவனங்களும் இரண்டாம் சுற்றில் பங்கேற்கவே இல்லை. முதல்சுற்று ஏலம் முடிந்துவிட்ட பிறகு முறைகேடாக அடுத்தசுற்று நடப்பதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வந்தது. இதனிடையே கடன்காரர்களுக்கு பணம் தர வேண்டுமானால் ஏலம் நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியது. இதையடுத்தே ஏப்ரல் 26ம் தேதி ஏலம் நடைபெற்றது. அம்புஜா குழுமம் வாங்கினாலும் நீதிமன்ற வழக்கை எதிர்த்து மேல்முறையீடு நடக்கவும் வாய்ப்புள்ளது. இந்த நிலையில் இரண்டாவது சுற்று நிறைவடைந்துள்ளது. என்ன நடக்கிறதோ பொருத்திருந்து பார்ப்போம்..