கூகுள் பிக்சல் 8 போன் வாங்க போறீங்களா?
கூகுள் நிறுவனத்தின் புதிய போன்களான பிக்சல் 8, பிக்சல் 8 புரோ ஆகிய போன்கள் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாக இருக்கின்றன. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இந்த போன்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.
*பிக்சல்8 போனில் 6.17 டச் ஸ்கீரின்,FHD வசதி உள்ளது.
*பிக்சல் 8புரோவில் 6.7 அங்குல டச் ஸ்கீரன்,QHD+டிஸ்பிளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷ் ரேட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
*இரண்டு ரக போன்களும் பிரத்யேக கூகுள் பிராசசர்களால் இயங்கக்கூடியவை,9 கோர் சிபியு இருப்பதால் பல செயற்கை நுண்ணறிவு நுட்பங்களை செயல்படுத்த எளிதாக இருக்குமாம்.
*புதிய போனில் வட்ட வடிவிலான ஓரங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.
*பிக்சல் 8 புரோ மாடலில் 3 கேமிராக்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது.
ஆடியோ எரேசர்,புகைப்படங்களில் முகங்களை மாற்றும் புதுப்புது செயற்கை நுண்ணறிவு நுட்பங்களும் இருக்கலாம்.
பிக்சல் 8 ரக போன்கள் 699 டாலர்களாகவும், புரோ ரகம்899 டாலராக இருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
பிக்சல் 8 ரக போன்கள் இந்தியாவில் 60-65000 ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பிக்சல் வாட்ச்2,பிக்சல் பட்ஸ் புரோ ஆகிய மாடல்களும் அறிமுகமாக இருக்கின்றன.கூகுள் ஸ்டோர் மற்றும் கூகுளின் யூடியூப் பக்கத்திலும் இந்த அறிமுக நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.