இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம்!!
மாதத்தின் முதல் நாளான மார்ச் 1ம் தேதி இந்தியபங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டன. கடந்த 8 நாட்களாக தொடர்ந்து சரிந்து வந்த இந்திய பங்குச்சந்தைகள் புதன்கிழமை நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 448 புள்ளிகள் உயர்ந்து 59 ஆயிரத்து 411புள்ளிகள் உயர்ந்து வணிகத்தை நிறைவு செய்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 146 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து450 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதானி என்டர்பிரைஸ் நிறுவன பங்குகளின் விலை 14 விழுக்காடு ஏற்றம் பெற்றுள்ளது. Hindalco Industries, UPL, SBI ,Axis Bank ஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை பதிவு செய்தன. Britannia Industries, Power Grid Corporation, Cipla, BPCL ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தன. உலோகத்துறை பங்குகள் 4விழுக்காடும்,பொதுத்துறை வங்கிகள் பங்குகள் 3விழுக்காடும் உயர்ந்துள்ளன. தேசிய பங்குச்சந்தையில் ஆட்டோமொபைல்,வங்கிகள்,தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் ஒரு விழுக்காடு உயர்ந்துள்ளன. தங்கம் விலை சவரனுக்கு 224 ரூபாய் உயர்ந்து 41 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 28 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 235 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 70 ரூபாய் 20 காசுகளாக விற்கப்பட்டது. கட்டி வெள்ளி ஒரு கிராமுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து 70 ஆயிரத்து 200 ரூபாயாக உயர்ந்துள்ளது.