100டாலர் கச்சா எண்ணெய்க்கு பை பை..
கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு ஓபெக்பிளஸ் என பெயர். இந்த அமைப்புதான் சர்வதேச அளவில் எத்தனை பணத்துக்கு எவ்வளவு கச்சா எண்ணெய் தரவேண்டும் என்பதை இறுதி செய்யும்.. இந்நிலையில் 100 டாலர்களுக்கு மேல் ஒரு பேரல் கச்சா எண்ணெய் செல்லுமா என்ற கேள்விக்கு அந்த அமைப்பு பதில் சொல்லியுள்ளது. அந்த அமைப்பின் தரவுகளின்படி, உலகளவில் கச்சா எண்ணெய் விலை சற்று குறையும் என்றும் உலகளாவிய பணவீக்கம் சற்று சீரடையும் என்றும் கூறப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவை தலைமை இடமாக கொண்டு இயங்கும் இந்த அமைப்புடன் இணைந்து ரஷ்யாவும் கச்சா எண்ணெய் உற்பத்தியை தீவிரப்படுத்த இருக்கிறது. அடுத்தாண்டு வரை கச்சா எண்ணெய் உற்பத்தியை குறிப்பிட்ட அளவுக்கு குறைக்க அந்த நாடுகள் திட்டமிட்ட நிலையில் சில நாடுகள் அக்டோபரில் இறுந்து மீண்டும் உற்பத்தியை அதிகரிக்கதிட்டமிட்டுள்ளன. அதிக எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டால் சந்தையில் அதிகம் எண்ணெய் புழங்கும் எனவே விலை குறையவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஈராக்,கஜகஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் எண்ணெய் உற்பத்தியில் தீவிரம் காட்டும் என்று கூறப்படுகிறது. உற்பத்தி அதிகரிப்பால் 80 டாலர்களுக்கும் குறைவாக கூட கச்சா எண்ணெய் விற்பனை செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலையில், அங்கு 110 மைல் தொலைவுக்கு ஒரு நகரத்தையே கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.