இனி டாலரை நம்ப முடியாதா?!!!!
ஆப்பிரிக்க நாடுகளில் மிகவும் பின்தங்கிய நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வே, அமெரிக்க டாலரை நம்பி இருக்கக்கூடாது என்பதற்காக புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. அந்த நாட்டின் ரிசர்வ் வங்கி,டிஜிட்டல் டோக்கன்களை உருவாக்கியுள்ளது. இந்த டிஜிட்டல் டோக்கன்கள் உள்ளூர் பணத்துக்கு மாற்றாக இருக்கும். இந்த பணம் தங்கத்தில் செய்யப்பட்டு இருக்கும். உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் இதனை ஜிம்பாப்வே அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு கட்டங்களாக இந்த தங்க டிஜிட்டல் டோக்கன்கள் பயன்படுத்த இருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக 180 நாட்களுக்கு முதலீடு செய்யும் வகையில் ஒரு திட்டம் உள்ளதாகவும் இது வெறும் முதலீடுகளை ஈர்க்க மட்டுமே பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.வங்கிகள் மற்றும் பரிமாற்ற நிறுவனங்களில் இந்த பணம் கிடைக்கும். இருக்கும் பணத்தை தங்கப் பணமாகவோ,தங்க டோக்கன்களாகவோ வங்கிகளில் மட்டுமே செய்யமுடியும் என்றும் ஜிம்பாப்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறைந்தபட்சம் 10 அமெரிக்க டாலரில் இருந்து இந்த தங்க டோக்கன் பணத்தை வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தங்க நாணயங்களுக்கு எவ்வளவு மதிப்பு இருக்குமோ அதே மதிப்புதான் இந்த டிஜிட்டல் டோக்கன்களுக்கும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.