போலிசிடம் போட்டு கொடுத்த சந்தா கோச்சார்!!!!
வீடியோகான் நிறுவனத்துக்கு சட்ட விரோதமாக கடன் கொடுத்ததாக எழுந்த புகார் குறித்து ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாகிகளான சந்தா மற்றும் தீபக் கொச்சாரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கொச்சார் தம்பதியும், வீடியோகான் நிறுவன தலைமை செயல் அதிகாரி வேணுகோபால் தூட்டும் சிறையில் உள்ளனர். இந்த சூழலில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எங்களை மட்டும் ஏன் கைது செய்தீர்கள் வேணுகோபாலையும் கைது செய்யுங்கள் என்று சந்தா மற்றும் தீபக் கொச்சார் தம்பதி கூறியதாக வீடியோகான் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக கடந்த 23ம் தேதி கொச்சார் தம்பதி கைதான நிலையில், 3 நாட்கள் கழித்து வேணுகோபால் தூட் கைது செய்யப்பட்டார். அனைவரும் தற்போது ஜனவரி 10ம் தேதி வரை சிறையில் இருக்கப் போகின்றனர். இந்த வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மார்ச் 2012ம் ஆண்டு வரை ஆயிரத்து 730 கோடி முறைகேடாக கடன் வழங்கப்பட்டதாகவும் ஐசிஐசிஐ வங்கியை ஏமாற்றியதாகவும் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது. கைதாகியுள்ள வேணுகோபால் தூட்டுக்கு இதய பாதிப்பு உள்ளதாகவும், கடுமையான நீரிழிவு பாதிப்பு உள்ளதாகவும் வேணுகோபால் தரப்பு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.