தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம்.. உயரும் வட்டி.. கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி அதிரடி
ஜூன் நிதிக் கொள்கைக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி அதன் நடப்பு நிதியாண்டிற்கான பணவீக்கக் கணிப்புகளை உயர்த்த வாய்ப்புள்ளது, மேலும் வட்டி விகித உயர்வை பரிசீலிக்கும் என்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி இந்த மாத தொடக்கத்தில் ரெப்போ விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகளாக 4.40% ஆக உயர்த்தியது. ஏப்ரல் மாதத்தில், RBI நடப்பு நிதியாண்டிற்கான பணவீக்க கணிப்பை 5.7% ஆக உயர்த்தியது. அதே நேரத்தில் அதன் பொருளாதார வளர்ச்சி கணிப்பை 7.8% இல் இருந்து 2022/23 க்கு 7.2% ஆக குறைத்தது.
கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளின் தாக்கத்தைக் குறைக்க 2020 ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மொத்தம் 115 பிபிஎஸ் குறைத்தது.
திங்களன்று வரலாறு காணாத அளவுக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்து டாலருக்கு எதிராக 77.47 ஆக நிறைவடைந்தது. ரூபாயின் மதிப்பை உயர்த்துவதற்காக ரிசர்வ் வங்கி டாலரை விற்றுள்ளது.
MPC யின் அடுத்த கூட்டம் ஜூன் 6-8 தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ளது.