தகிக்கும் தங்கம் விலை!!!
கடந்த ஒரு வாரமாக ஆபரணத்தங்கம் விலை ரோலர் கோஸ்டர் போல் ஏற்ற இறக்கங்கள் கொண்டதாக இருக்கிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மார்ச் 23ம்தேதி ஒரு கிராம் 70ரூபாய் உயர்ந்து 5ஆயிரத்து 540 ரூபாய்க்கு விற்க படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44ஆயிரத்து320ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை 1ரூபாய் 40காசுகள் உயர்ந்து 75 ரூபாய் 40 காசுகளுக்கு விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி விலை கிலோ ஆயிரத்து 400 ரூபாய் உயர்ந்து 75 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது.அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் தற்காப்பு நடவடிக்கை காரணமாக 25 அடிப்படை புள்ளி கடனை அமெரிக்கா உயர்த்தியது. இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தை லேசான சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 289புள்ளிகள் சரிந்து 57ஆயிரத்து925புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 75புள்ளிகள் சரிந்தன.17ஆயிரத்து76புள்ளிகள் தேசிய பங்குச்சந்தை யின் வர்த்தகம் முடிந்தது. 1428 பங்குகள் விலை ஏற்றம் கண்டன. 1983 பங்குகள் விலை சரிந்தன. State Bank of India, Asian Paints, HCL Technologies, Kotak Mahindra Bank, Bajaj Auto ஆகிய நிறுவன பங்குகள் விலை சரிந்தன. Hindalco Industries, Nestle India, Bharti Airtel, Maruti Suzuki , JSW Steel.நிறுவன பங்குகள் விலை ஏற்றம் கண்டன , ரியல் எஸ்டேட்,வங்கி, தகவல் தொழில்நுட்ப பங்குகள் சரிந்தன, உலோகம் மற்றும் ஆற்றல் துறை பங்குகள் குறிப்பிடத்தக்க ஏற்றம் கண்டன.