மழை வெள்ளத்தில் வீடு இடிந்து விழுந்தாலோ, வீட்டில் உள்ள பொருட்கள் திருட்டுப் போனாலோ இன்சூரன்ஸ் இழப்பீடு பெற முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
வீடுகளுக்கு மட்டுமல்ல, வீட்டில் உள்ள பொருட்கள் திருட்டுப் போனாலும், சேதமடைந்தாலும் காப்பீட்டின் துணை கொண்டு இழப்பீடு பெறலாம், நகைகள், விலையுயர்ந்த வீட்டு உபயோகப் பொருட்கள் என்று காப்பீட்டு நிறுவனங்கள் குறிப்பிட்ட பொருட்களுக்கு காப்பீட்டு அனுமதி வழங்குகின்றன, நீங்கள் வாடகை வீட்டில் குடியிருந்தாலும் வீட்டுக் காப்பீட்டின் வழியாக உங்கள் விலையுயர்ந்த பொருட்களுக்கு காப்பீடு பெற்றுக்கொள்ளலாம். அந்த காப்பீட்டு பல்வேறு சிக்கலான சூழல்களில் ஏற்படும் இழப்பில் இருந்து உங்களைக் காக்கும். வீட்டுக் காப்பீட்டுக்கு செலவு அதிகம் என்று நினைக்க வேண்டாம். மிகக்குறைந்த அளவிலான ப்ரீமியம்களில் சிறந்த பாதுகாப்புத் திட்டங்களை வழங்கும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இருக்கின்றன.
புளியந்தோப்பில் வசிக்கும் எனக்குத் தெரிந்த நண்பர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வங்கியில் கடன் வாங்கி சொந்த வீடு கட்டினார், கனவுகளோடும் குழந்தைகளோடும் குடியேறியவருக்கு மழை வெள்ளம் அதிர்ச்சி அளித்தது, நீண்ட நாட்கள் தேங்கிய மழை நீரால் சுவர்கள் அரிக்கப்பட்டு, விரிசல்களோடு சேதமடைந்த வீட்டுக்கு அவர் இன்சூரன்ஸ் செய்திருக்கவில்லை, வங்கிக் கடனே இன்னும் முடியாத நிலையில் திடீரென்று தேவைப்பட்ட 2 லட்சத்துக்காக மேலும் கடன் வாங்கி பெரிய மன அழுத்தத்துக்கு ஆளானார்.
”வீட்டு இன்சூரன்ஸ் (HOME INSURANCE) என்பது காலமெல்லாம் உழைத்து சிறுகச் சிறுகச் சேமித்து ஆசை ஆசையாய்க் கட்டிய வீட்டின் பாதுகாப்புக்கு மிகவும் தேவையானது. புயல், மழை, வெள்ளம், நிலநடுக்கம், தீ விபத்து,மற்றும் கலவரங்களின் போது நிகழும் தாக்குதல் என்று பல நிகழ்வுகள் நாம் எதிர்பார்க்காத நேரங்களில் நடக்கிறது. குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் இப்போது அடிக்கடி ஏற்படுகிற மழை வெள்ளம் பலரது கனவு வீடுகளை சிதைத்து விட்டுச் சென்றிருக்கிறது, இந்தக் காலகட்டங்களில் இன்சூரன்ஸ் உதவியால் வீடுகளை ரிப்பேர் செய்து கொள்ள முடியும், இழப்பீடு பெற முடியும்.
நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த பலரும் இன்று வங்கிக் கடன் வாங்கித்தான் சொந்த வீடோ, அடுக்குமாடிக் குடியிருப்போ வாங்குகிறார்கள், “வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி என்பார்களே” அப்படித்தான் பல ஆண்டுகள் உழைப்பை வட்டியும், முதலுமாக தவணை முறையில் செலுத்துகிறார்கள். இப்படிக் கடன் வாங்கிய குடும்பத்தலைவர்கள், முதன்மைக் கடன் வாங்கியவர்கள் பலர் கடந்த பெருந்தொற்றின் கோரப்பிடியில் சிக்கி மரணமடைந்த நிகழ்வு நாம் அனைவரும் அறிந்ததுதான், ஆசையாய் வாங்கிய வீடுகளை விற்றுவிட்டு வெளியேறிய பலரை நாம் பார்த்திருக்கிறோம், விபத்தால் வேலை செய்ய முடியாதவர்கள், வேலை இழப்பினால் பாதிக்கப்படுபவர்கள் இத்தகைய துயரங்களுக்கு ஆளாக நேரிடும்.
நம்முடைய குடும்பத்தின் எதிர்காலம் ஒரு பக்கம் இருக்க, ஆசை ஆசையாய் வாங்கிய வீடு, நாம் இல்லாத சூழலில் நமக்கு வேலை இழப்பு ஏற்படும் நிலையில், தொடர்ந்து மாதத் தவணைச் செலுத்த முடியாத காரணத்தால் கடன் கொடுத்த நிறுவனத்தால் சட்டப்படி கையகப்படுத்தும் நிலை சமூகத்தின் செல்வாக்கான பிரபலமான மனிதர்களுக்கே வருவதை பார்க்கிறோம். இந்த சூழலில் இருந்து நம்மை பாதுகாக்க “கடன் காப்பீடு” எனும் ஒரு வகைக் காப்பீடு. இதில் நாம் வாங்கும் கடன் தொகைக்கு ஏற்ப கடன் பாதுகாப்பு காப்பீட்டை (CREDIT SHIELD INSURANCE) எடுத்துக் கொள்ளலாம். நாம் வாங்கும் பல லட்சம் கடனுக்கு சில ஆயிரங்கள் காப்பீட்டு சந்தாவாக செலுத்தினால் அந்த கடன் தொகைக்கு அவர்கள் உறுதி அளிப்பார்கள். நாம் இல்லை என்றாலும் காப்பீட்டு நிறுவனம் நாம் கடன் வாங்கிய நிறுவனத்துக்கு அந்த தொகையை செலுத்திவிடும். நம்முடைய கனவு வீடு நம்முடைய அன்பான குடும்பத்திற்கு எப்போதும் இருக்கும்.
வீட்டுக் காப்பீட்டுத் திட்டங்களில் குறிப்பிடத்தகுந்த சிலவற்றை அறிந்து கொள்ளுங்கள்:
1) கட்டிடங்களுக்கான சிறப்பு இன்சூரன்ஸ் (Home Structure/Building Insurance) எத்தகைய சேதங்களில் இருந்தும் பாதுகாக்கும்.
2) மூன்றாம் தரப்பு அல்லது குடியிருப்பாளர்களால் நேரும் இழப்புகளுக்கான காப்பீடு (Public Liability Coverage)
3) தனிப்பட்ட விபத்துகளுக்கான காப்பீடு (Personal Accident) : விபத்து அல்லது உடல் காயம் காரணமாக காப்பீடு செய்யப்பட்ட நபரின் நிரந்தர ஊனம் அல்லது இறப்பின் போது பாதுகாக்கிறது.
4) திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களால் நிகழும் இழப்புகளுக்கான காப்பீடு (Burglary & Theft)
5) விலையுயர்ந்த பொருட்களுக்கான காப்பீடு (Contents Insurance)
வீட்டுக்கான காப்பீடு மிக முக்கியமான ஒன்று, அலட்சியமாக இருக்க வேண்டாம், உங்கள் வீட்டுக்கான காப்பீட்டைப் இப்போதே பெறவும், உங்களிடம் இருக்கும் காப்பீடு எந்த வகையானது என்பதைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளவும் கீழ்க்கண்ட எண்ணில் உடனடியாக எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். அல்லது உங்கள் கேள்விகளை, சந்தேகங்களை எங்களுக்கு 9150059377 WhatsApp செய்யுங்கள்.
நர்மதா – 9150059377