வேலையைவிட்டு தூக்கினாலும் உதவும் கோல்டன் பாரசூட் பற்றி தெரியுமா ?
டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவாரா மாட்டாரா என்று பல மாதங்களாக நீண்டுகொண்டே சென்ற பிரச்சனை ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது. 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பணம் கொடுத்து டிவிட்டரை மஸ்க் அதிகாரபூர்வமாக வாங்கி விட்டார் இந்த நிலையில் டிவிட்டரில் மிகமுக்கிய தலைமைப்பொறுப்பில் இருந்த 3 பேரை மஸ்க் வேலையை விட்டு தூக்கிவிட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வால் உள்ளிட்ட 3 பெரிய பதவியில் இருந்தவர்களை பாதுகாக்க கொண்டு வரப்பட்டது கோல்டன் பாராசூட் முறை, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர்,பணி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த முறை கொண்டு வரப்பட்டுள்ளது. நிறுவனத்தில் பணியில் உள்ளபோது நிறுவனமே வேறு நபரின் கைக்கு மாறும்பட்சத்தில் புதிய நிர்வாகிகளுக்கு பழைய பணியாளர்களை பிடிக்கவில்லை எனில் பணி நீக்கம் சகஜமாக உள்ளது. அவ்வாறு திடீர் பணி நீக்கம் செய்தால் பழைய பணியாளர்களுக்கு குறிப்பிட்ட தொகையை அளிக்க வேண்டும் என்பது விதி.
இந்த விதிப்படி பராக் அகர்வால்,உள்ளிட்ட 3 பேரின் பணநீக்கத்துக்கு மஸ்க் தற்போது 100 கோடி ரூபாய் இழப்பீடு அளித்துள்ளார். கோல்டன் பாராசூட் முறை இந்தியாவில் பிரபலம் அடையவில்லை என்றாலும் அமெரிக்காவில் கடந்த 1961ம் ஆண்டே கொண்டு வரப்பட்டாலும் வெகு சிலர் மட்டுமே இந்த முறை மூலம் பலன்பெற்றுள்ளனர் என்கிறது வரலாறு…டிவிட்டர் நிறுவனத்தை பெரிய தொகை கொடுத்து வாங்கயுள்ள மஸ்க், மேலும் பல உறுப்பினர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளார். ஏனெனில் டிவிட்டரில் பணியாற்றியவர்களுக்கு லட்சங்களில் சம்பளம் அளிக்கப்பட்டது. டிவிட்டரில் ஏற்கனவே பணியாற்றியவர்களுக்கு அளிக்கப்பட்ட பழைய சம்பளம் தரமுடியாது என்றும் மஸ்க் முரண்டுபிடித்து வருகிறார்.