மானியம் இல்லாமல் வண்டி எவ்ளோ உயரும் தெரியுமா..!!!!
இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகப்படுத்தும் நோக்கில் fameஎன்ற திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மானியத்துடன் மின்சார ஸ்கூட்டர் வாங்க முன்னெடுப்புகள் செய்யப்பட்டன.
போதிய வரவேற்பு கிடைக்காததால் fameதிட்டத்தை அரசு தொடரும் என்றும், திட்டத்தை தொடர வாய்ப்பு இல்லை என்றும் இருவேறு கருத்துகள் உள்ளன. இந்நிலையில் பெரிய மின்சார ஸ்கூட்டர் நிறுவனங்களுக்கு மானியம் தேவைப்படாது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் fameதிட்டம் செயல்படவில்லை என்றால் எவ்வளவு விலை உயரும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. ஒக்காயா நிறுவன பைக்குகள் 17 முதல் 20 விழுக்காடு வரை விலை உயரும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. fame திட்டத்தில் ஒரு கிலோவாட் பேட்டரிக்கு 10ஆயிரம் ரூபாய மானியம் அளிக்கப்படுகிறது.
ஓலா நிறுவனத்தின் பைக்குகள் தற்போது மானியத்துடன் 1.47லட்சம் ரூபாயாக இருக்கிறது. மானியம் இல்லாமல் 1.69 லட்சமாக விற்கப்பட இருக்கிறது. உற்பத்திகள் அதிகரிக்கையில் மின்சார ஸ்கூட்டர்களின் விலை கணிசமாக குறையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.