2023 நிதியாண்டின் லாபகரமான நிறுவனங்கள் எவை தெரியுமா?
பங்குச்சந்தைகளில் மிகவும் லாபகரமான நிறுவனங்களின் பட்டியல் அவ்வப்போது வெளியாவது உண்டு. அந்த வகையில் 2023 நிதியாண்டில் மிகவும் லாபகரமான நிறுவனங்களின் பட்டியலில் ரிலையன்ஸ் குழுமம் தொடர்ந்து 9ஆவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 66,702 கோடி ரூபாயாகும் இது கடந்தாண்டை விட 9.8% அதிகமாகும். இரண்டாவது இடத்தில் பாரதஸ்டேட் வங்கி,இந்த பட்டியலில் கடந்தாண்டு 8 ஆவது இடத்தில் இருந்த இந்த பங்குகள் 6 இடங்கள் முன்னேறியுள்ளன.இந்த நிறுவனத்தின் லாபம் மட்டும் 55,648 கோடி ரூபாய் – இது 57.3% வளர்ச்சியாகும். மூன்றாவது இடத்தில்எச்டிஎப்சி வங்கி உள்ளது.இது கடந்தாண்டு 5ஆவது இடத்தில் இருந்தது.20.8%உயர்ந்த இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 45,997 கோடி ரூபாய். 4ஆவது இடத்தில் டிசிஸ்,இந்த நிறுவனத்தின் ஓராண்டு வளர்ச்சி 9.96%,இதன் நிகரலாபம் 42,417 கோடி ரூபாயாகும். 5ஆவது இடத்தில் ஐசிஐசிஐ-கடந்தாண்டு 7ஆம் இடத்தில் இருந்த இந்த நிறுவனம் தற்போது 5ஆவது இடத்துக்கு வந்துள்ளது. வளர்ச்சி: 35.5%,நிகர லாபம் : 34,037கோடி. ஆறாம் இடத்தில் கோல் இந்தியா உள்ளது. இதன் நிகரலாபம் 62% உயர்வு – நிகர லாபம் 28,165 கோடி ரூபாய். ஏழாம் இடத்தில் எச்டிஎப்சி உள்ளது. கடந்த முறை 8, இந்த முறை 7ஆம் இடம், வளர்ச்சி:15.78%, நிகர லாபம் 26,161 கோடி ரூபாய். எட்டாவது இடத்தில் இன்போசிஸ் உள்ளது. இந்த நிறுவன லாப வளர்ச்சி 8.9%,நிகர லாபம் 24,095 கோடி ரூபாய். நவகிரகம் போல 9ஆம் இடத்தில் உள்ளது ஐடிசி நிறுவனம், லாப வளர்ச்சி 25.9%,நிகர லாபம் 19,192 கோடி ரூபாயாக உள்ளது. கடைசி இடத்தில் கோடக் மகேந்திரா வங்கி இருக்கிறது. லாபத்தின் வளர்ச்சியாக 23.46% கொண்டுள்ள இந்த வங்கியின் நிகர லாபம் 14,925 கோடி ரூபாயாக உள்ளது.