வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை உயர்வு
வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ 3.50 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் இது இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லியில் மானியமில்லாத எல்பிஜி 14.2 கிலோ சிலிண்டரின் விலை இப்போது ரூ.1,003 ஆக உள்ளது.
சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து மே 7ஆம் தேதி இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதற்கு முன்பு மார்ச் 22ஆம் தேதியும் அதே அளவு விலை உயர்த்தப்பட்டது. சர்வதேச எரிசக்தி விகிதங்கள் உறுதியானதைத் தொடர்ந்து ஆறு வாரங்களில் இரண்டாவது விலை உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.