கவலைப்பட வேண்டாம்… நாங்க இருக்கோம்!!!! நம்பிக்கை கொடுக்கும் நிறுவனம்!!!!
விஸ்தாரா விமான நிறுவனம் ஏர் இந்தியாவில் இணைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த சூழலில் தற்போது விஸ்தாரா
நிறுவனத்தின் சிஇஓ வாக உள்ள வினோத் கண்ணன் தெரிவித்துள்ளார். அவர் விஸ்தாரா நிறுவன ஊழியர்களுக்கு எழுதியுள்ள மின்னஞ்சலில் இதனை தெரிவித்துள்ளார். ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைக்கும் பணி என்பது நீண்ட நெடியதாக இருக்கும் என்றும் அதுவரை விஸ்தாரா நிறுவனம் சுதந்திரமாகவே செயல்படும் என்றும் வினோத் தெரிவித்துள்ளார்.
தற்போது விஸ்தாராவில் 4 ஆயிரத்து 700 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் வருங்காலம் குறித்து கவனம் செலுத்தியுள்ள வினோத், ஏர் இந்தியாவுடன் விஸ்தாரா இணைவது என்பது நிச்சயம் பல வாய்ப்புகளை உற்பத்தி செய்யும் என்று குறிப்பிட்டுள்ள அவர் பணியாளர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். இணைந்து வலுவாக செயல்பட வேண்டிய தருணம் என்றும் அவர் தனது பணியாளர்களுக்கு தெரிவித்துள்ளார். பங்குதாரர்கள் ஒரே நபர்களாக இருந்தாலும், இணைப்பு முழுமையாக முடியும் வரை வழக்கமான பணிகளை விஸ்தாரா நிறுவன பணியாளர்கள் தொடரலாம் என்றும் அவர் நம்பிக்கையூட்டியுள்ளார். தற்போது விஸ்தாரா நிறுவனத்தில் 54 விமானங்கள் உள்ள நிலையில் அடுத்தாண்டு இறுதிக்குள் 70 விமானங்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் விஸ்தாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.