கிரிப்டோவில் அதிரடி மாற்றம் !!!
பணத்தை தொட்டுப்பார்த்து சந்தோஷப்படுவோர் பலர், சிலர் அக்கவுண்டில் இத்தனை ரூபாய் இருக்கிறது என்று அடிக்கடி சரிபார்ப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பார்கள், ஆனால் இந்த இரண்டுமே இல்லாமல் போங்கான ஆட்டம் என்றால் அது கிரிப்டோகரின்சகள்தான் என்கின்றனர் நிபுணர்கள், இதை யார் அங்கீகரித்தார்கள் என்றால் தெரியாது, பிரச்னை என்றால் யாரை கேட்பது என்றாலும் தெரியாது.. இத்தனை தெரியாது என்ற அம்சம் கொண்ட கிரிப்டோகரன்சிகள் சட்டவிரோத நடவடிக்கைக்குத்தான் பயன்படுகிறது என்ற புகாரும் உள்ளது. இந்த நிலையில் யாருடைய பெயரில் கிரிப்டோகரன்சிகள் உள்ளன என்பதில் அமெரிக்கா அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறது.சைபர் குற்றங்களுக்கு மட்டுமே இந்த கிரிப்டோ கரன்சிகள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படும் நிலையில்,அதனை தடுக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.முறையற்ற பணம்புழங்குவதை தடுக்க வேண்டும் என்பதில் அரசாங்கங்கள் தயாராக இருக்கவேண்டும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. டிஜிட்டல் அடையாளத்தை தர அமெரிக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருவதாக கூறும் அமெரிக்க அதிகாரிகள், பயங்கரவாதிகள் இதனை பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளனர். மிக்சர்ஸ் மற்றும் யாருடையது என்ற அடையாளப்படுத்துவதும் நிதி பாதுகாப்பை அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.