ஐ.பி.ஓ வுக்குத் தயாராகும் “ஈமுத்ரா” !

டிஜிட்டல் சிக்னேச்சர் சான்றிதழ் சந்தையில் மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய அங்கீகாரம் பெற்ற சான்றளிக்கும் நிறுவனமான “ஈமுத்ரா”, செபியிடம் ஐபிஓக்கான வரைவு விதிகளை தாக்கல் செய்துள்ளது. ரூபாய் 200 கோடி மதிப்புள்ள பங்குகளை புதிதாக வெளியிட்டதுடன் விளம்பரதாரர்கள் உட்பட விற்பனையாளர்கள், பங்குதாரர்களால் 85,10,638 பங்குகளை விற்கும் சலுகையும் இதில் அடங்கும்.
இந்த விற்பனையை ஐஐஎஃப்எல், யெஸ் செக்யூரிட்டிஸ், இண்டோரியண்ட் ஃபைனான்ஸியல் சர்வீசஸ் முதலானவை நிர்வகிக்கின்றன. இதன் மூலமாக சுமார் 35 கோடி ரூபாய் கடனை ஈமுத்ரா நிறுவனம் அடைக்கும் என தெரிகிறது.
அக்டோபர் 15-ஆம் தேதி நிலவரப்படி நிறுவனத்தின் மொத்த கடன்கள் 51.22 கோடி ரூபாய். நிறுவனம் 40.22 கோடியை செயல்பாட்டு மூலதனமாகவும், 46.37 கோடியில் இந்தியா மற்றும் பிற நாடுகளில் உள்ள டேட்டா சென்டருக்கு உபகரணங்கள் வாங்குவதற்கு நிதியளிக்கும். ஈ முத்ரா நிறுவனம் 15 கோடியை தயாரிப்பு மேம்பாட்டிலும், 15.22 கோடியை ஈ முத்ரா இன்க் கில் முதலீடு செய்து அதன் வணிக மேம்பாடு, விற்பனை சந்தை படுத்துதல் மற்றும் பிற தொடர்புடைய செலவுகளை செய்யும்.
20 மேற்பட்ட பொது, மற்றும் தனியார் துறை வங்கிகளும், மாநில அரசாங்கங்களும், ஈ முத்ராவின் வாடிக்கையாளர்களில் அடங்கும். இது நிதியாண்டில் ஈ முத்ராவின் லாபம் 37.7 சதவீதம் அதிகரித்து ரூபாய் 25.35 கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டில் 18.41 கோடியாக இருந்தது. முந்திய ஆண்டைவிட செயல்பாடுகளின் வருவாய் 13 சதவீதம் அதிகரித்து 131.59 கோடியாக இருந்தது.