ஏற்றுமதி சரிவு!!!
ஓரு நாட்டின் ஏற்றுமதி இறக்குமதியை வைத்தே அந்நாட்டின் பொருளாதார நிலை உலக நாடுகள் மத்தியில் கணிக்க முடிகிறது. மாதந்தோறும் இந்தியாவில் ஏற்றுமதி இறக்குமதி குறித்த தரவுகளை மத்திய அரசு வெளியிடுகிறது. கடந்த 16ம் தேதி இது தொடரபான தரவை வெளியிட்ட அரசு, டிசம்பரில் வெளிநாட்டு ஏற்றுமதி 12% குறைந்துள்ளதாக கூறியுள்ளது. அதாவது 2021டிசம்பரில் இருந்ததை விட கடந்தாண்டு 12%குறைவாகும். 2021இல் 39.27 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த ஏற்றுமதி தற்போது 34பில்லியன் டாலர் ஆக சரிந்துள்ளது. நிலைமை இப்படி இருக்க டிசம்பரில் இறக்குமதியில் கூட 2 பில்லியன் டாலர் சரிந்துள்ளது. கடந்த 2021டிசம்பரில் 60பில்லியனாக இருந்த இறக்குமதி, தற்போது 58.24பில்லியன் டாலர் ஆக சரிந்துள்ளது. Merchandise எனப்படும் பொருட்கள் விற்கப்படும் விகிதமும் கணிசமாக குறைந்தது. அதாவது நவம்பர் டிசம்பர் கால கட்டத்தில் கடந்தாண்டு பொருட்கள் வர்த்தக தட்டுப்பாடு 23.76பில்லியன் டாலர் ஆக சரிந்துள்ளது. உலகளவில் பொருளாதார மந்தநிலை உள்ளபோது,, கூட இந்தியா சிறப்பாக செயல்படுவதாக மத்திய அரசு தரவுகள் தெரிவிக்கின்றன