குடிக்கிற காப்பியில் கண்ணாடியா?
அமெரிக்கர்கள் உணவுப்பழக்க வழக்கத்தில் தவிர்க்க முடியாத ஒரு பங்காக காபி திகழ்கிறது. இந்த நிலையில் காப்பியில் பல புதுமைகளை பெப்சிகோ நிறுவனமும் செய்துள்ளது. பிரபல கோலா நிறுவனமான பெப்சி, ஸ்டார்பக்ஸ் காபிகடைகளில் குளிர்ந்த காப்பியை விற்று வருகிறது.இந்நிலையில் அந்த குளிர்ந்த காப்பி பாட்டில்களுக்குள் கண்ணாடி இருந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து 25ஆயிரம் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த frappucinno காப்பி திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டது. ஜனவரி 28ம் தேதி தொடங்கிய இந்த திரும்பப்பெறும் நடவடிக்கையில் இதுவரை 3 லட்சம் குளிர்ந்த காப்பி பாட்டில்கள் திரும்பப்பெறப்பட்டுள்ளன. குறிப்பிட்ட வெனிலா சுவையில் உள்ள காப்பிகளில்தான் இந்த புகார் எழுந்தது. இதனால் அந்த திரும்பப்பெறும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பிட்ட உடைந்த கண்ணாடிகளால் அதை குடிப்போருக்கு பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் தாமே முன்வந்து அந்த காப்பியை பெப்சிகோ திரும்பப்பெற்றுள்ளது. மார்ச் 8, மே 28, ஜூன் 4, ஜூன் 10ல் காலாவதியாகும் பாட்டில்களில்தான் இந்த பிரச்சனை காணப்பட்டது. பெப்சிகோ நிறுவனம் நல்ல நோக்கத்துக்காக திரும்பப் பெற்றுக்கொண்டாலும், இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.