கூகுள், அமேசான் இந்தியாவில் முதலீடு :
பிரதமர் மோடி, அமெரிக்காவில்3நாட்கள் டூர் சென்று அடுத்தடுத்து பல துறை பிரபலங்களை சந்தித்தார். இதன் ஒரு பகுதியாக, கூகுள் நிறுவன ceo சுந்தர் பிச்சை, அமேசான் நிறுவன சிஇஓ ஆண்ட்ரூ ஜாசியை பிரதமர் சந்தித்து பேசினார். இதன் ஒரு பகுதியாக கூகுள்,குஜராத் மாநிலத்தில் சர்வதேச நிதிநுடப் மையத்தை தொடங்க இருப்பதாக சுந்தர் பிச்சை அறிவித்தார். இதே போல அமேசான் நிறுவனம் ஏற்கனவே 11பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்துள்ளதாகவும், மேலும் 15பில்லியன் டாலர் முதலீடு சேர்ந்து 2.13லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.இது மட்டுமின்றி கூகுளின் ai நுட்பமான பார்ட் மூலம் 100 மொழிகள் ஆய்வு நடக்க இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். இந்த முதலீடுகள் மூலம் மேலும் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நுட்பங்கள், வேலைவாய்ப்பு, கண்டுபிடிப்புகளுக்கு இந்தியா முக்கியத்துவம் தருவதாக பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.