இந்த விலைக்கு விற்றால் நானே வாங்க மாட்டேன்!!!!
என்னாலேயே உங்கள் நிறுவன காரை வாங்க முடியவில்லை என்று பிரபல சொகுசு கார் நிறுவனமான மெர்சிடீஸ் பென்ஸை நிதின் கட்கரி கலாய்த்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சார காரான EQS 580 4matic மின்சார காரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய அமைச்சர் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் இந்தியாவிலேயே அதிக கார்களை உற்பத்தி செய்தால்தான் விலையும் குறையும் என்றார்
தாம் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் தம்மால் இந்த காரை வாங்க முடியவில்லை என்றும் அவர் ஆதங்கப்பட்டார்
மெர்சிடீஸ் நிறுவனம் தனது மின்சார கார்களை ஜெர்மனியில் தயாரித்து இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு இந்தியாவில் விற்பனை செய்தது. அப்போது இந்த காரின் விலை 1 கோடியே 7 லட்சம் ரூபாயாக இருந்தது.
இந்தியாவில் இதுவரை 15 லட்சத்து 70 ஆயிரம் பேர் மின்சார வாகனங்களை பதிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
இந்தியாவில் மின்சாதன பொருட்களின் சந்தை 335% உயர்ந்துள்ளது
அதிவிரைவு சாலைகள் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ளதால் மெர்சிடீஸ் கார்கள் அதிகம் விற்கப்பட வாய்ப்புள்ளதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்
இந்திய ஆட்டோமொபைல் துறையின் மொத்த மதிப்பு 7லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் என்றும்,இதில் ஏற்றுமதிகள் மூன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு நடப்பதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்
15 லட்சம் கோடி ரூபாயாக இந்த துறையை வளர்க்க வேண்டும் என்பதே தனது இலக்கு என்றும் அமைச்சர் தனது விருப்பத்தை தெரிவித்தார்
பழைய கார்களை உருக்கி அதன் மூலப்பொருட்களை பென்ஸ் நிறுவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் இதனால் உற்பத்தி செலவு 30 விழுக்காடு குறையும் என்றும் அவர் தெரிவித்தார்
ஒரு மாவட்டத்துக்கு பழைய கார்களை அழிக்கும் ஆலைகள் 4 வரவேண்டும் என்றும் இதனால் 2ஆயிரம் ஆலைகள் உருவாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் 1 கோடியே 2 லட்சம் பழைய கார்களை உருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்