வர்த்தக ஏற்றுமதியில் 400 பில்லியன் டாலர்களை இந்தியா எட்டும் – மத்திய அமைச்சர் ஃபியூஷ் கோயல் தகவல்
இந்தியாவின் சேவைத்துறை ஏற்றுமதியை 1 டிரில்லியன் டாலர்கள் அளவுக்கு உயர்த்தும் வகையில் வளர்ச்சியை ஊக்குவிக்க மத்திய அரசு முழுஆதரவை அளிக்கும் என மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் ஃபியூஷ் கோயல் உறுதியளித்துள்ளார். இதுகுறித்து இந்தியாவில் உள்ள முன்னணி ஐடி தொழில்நிறுவன தலைவர்களிடையே காணொலி வாயிலாக உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
40 பில்லியன் டாலர்கள் இலக்கை எட்டும்:
நடப்பு ஆண்டில், வர்த்தக ஏற்றுமதியில் 400 பில்லியன் டாலர்களை எட்டும் பாதையில் இந்தியா செல்வதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் ஃபியூஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார். மேலும், சேவை ஏற்றுமதி சுமார் 240 பில்லியன் முதல் 250 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இருக்கும். இது குறைவான இருந்தாலும், வர்த்தக ஏற்றுமதியை எட்டிபிடிக்கும் வகையில் வளர்ச்சி அடைய முடியும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐடி மையங்கள் தொடங்குவதை வரவேற்கிறோம்:
இரண்டாம் அடுக்கு, மூன்றாம் அடுக்கு நகரங்களில் ஐடி மையங்களை தொடங்க ஐடி தொழில் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதை வரவேற்கிறோம். இது ஏராளமான வேலைவாய்ப்புகளை வழங்குவதுடன், ஐடி மையங்கள் தொடங்கப்படும் பகுதிகளுடைய வளர்ச்சிக்கும் உதவும். ஐடி மையங்களை தொடங்குவதற்கான நகரங்களை ஐடி தொழில்நிறுவனங்கள் அடையாளம் கண்டு. அரசுக்கு தெரிவித்தால், அதற்கான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளை மத்திய அரசு வழங்க தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் ஃபியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.