நண்பனால் அதிகம் பயனடையும் இந்தியா…
ரஷ்யாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் பட்டியலில் மீண்டும் இந்தியா முதலிடம் வகிக்கிறது.ரஷ்யாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெயில் 70 விழுக்காடு இந்தியாவுக்கு வருவதாக கூறுகிறது புள்ளி விவரம். மலிவான விலை, குறைந்த இறக்குமதி வரி ஆகியவற்றால் இந்திய சுத்தீகரிப்பு நிலையங்களுக்கு கொள்ளை கொள்ளை லாபம் கிடைக்கிறது. ரஷ்யாவின் ராஸ்நெஃப்ட் மற்றும் இந்தியன் ஆயில் இடையே புதிய ஒப்பந்தம் ஒன்றும் போடப்பட்டுள்ளது. அதன்படி மாதத்துக்கு 1 கோடியே 10லட்சம் பேரல் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு வழங்கப்பட இருக்கிறது. ரஷ்யாவில் இருந்து சீனாவுக்கு தற்போது கச்சா எண்ணெய் தேவை மிகவும் குறைவாக இருப்பதால் அவர்கள் கிடைத்தவரை லாபம் என இந்தியாவிடம் கச்சா எண்ணெயை விற்றுத் தள்ளுகின்றனர். உக்ரைனுடன் போர் நடத்தி வரும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை வாங்கினால் எங்கு மேற்கத்திய நாடுகளின் கணடனத்துக்கு ஆளாக நேரிடுமோ என்று சில நாடுகள் அச்சமடைகின்றன. இந்தியாவைத் தவிர்த்து வேறு எந்த நாடும் ரஷ்யாவிடம் இத்தனை ஆர்வமாக கச்சா எண்ணெயை வாங்கவில்லை என்கிறது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புள்ளி விவரம்.