ரஷ்யாவுடன் மீண்டும் ராசியாகும் இந்தியா…

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பது இந்தியாவுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது.
இந்நிலையில் ரஷ்ய கச்சா எண்ணெய் ஒரு பேரல் 60 டாலருக்கு கிடைப்பதால் இந்தியா அதிகளவில் வாங்கி வைக்க விரும்புகிறது.
ஜி 7 நாடுகள் மற்றும் அதன் தோழமை நாடுகள் சேர்ந்து 60 டாலர்களுக்கு மேல் ரஷ்யா கச்சா எண்ணெயை விற்க கூடாது என்று உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் உக்ரைனில் இருந்து கிடைக்கும் கச்சா எண்ணெயின் அளவும் விலையும் குறைந்திருக்கின்றன.
இந்தியாவிக்கு கச்சா எண்ணெய் விநியோகித்து வந்த கசான்,லிகோவ்ஸ்கி மற்றும் என்எஸ் சென்சுரி ஆகிய எண்ணெய் கப்பல்களுக்கு அண்மையில் மேற்கத்திய நாடுகள் தடை விதித்தன.
மேற்கத்திய தடைகளால் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே உள்ள பந்தம் தொடரும் என்று இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்