$1.3 பில்லியன் திரட்டிய இந்திய நிறுவனங்கள் !
இந்திய நிறுவனங்கள் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளிநாட்டு சந்தையில் 1.3 பில்லியன் டாலர்களை திரட்டியுள்ளன என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 34 சதவீதம் குறைவு என்றும் அது கூறியுள்ளது. போன வருடம் இதே காலகட்டத்தில் உள்ளூர் நிறுவனங்கள் 2.03 பில்லியன் டாலர்களுக்கு மேல் வெளிநாட்டு சந்தையில் திரட்டின என்று ரிசர்வ் வங்கியின் தரவு காட்டுகிறது.
அதேசமயம் வெளி வர்த்தக கடன் மூலமாக போர்ட்டம்சோலார் பிளஸ் நிறுவனம், ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை வெளியிட்டு 1,47,49,994 டாலர்களை திரட்டியது. (இவை ‘மசாலா பத்திரங்கள்’ என்று அழைக்கப்படும்).
இந்த நிறுவனம் மின்சாரம், வாயு மற்றும் நீராவி குளிரூட்டும் சாதனம் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளது. கடன் வாங்கும் வருமானம், ரூபாய் கடன்களை மறுநிதியளிப்பிற்கு பயன்படுத்தும் என்று ரிசர்வ் வங்கியின் தரவு தெரிவிக்கின்றது.
வெளி வர்த்தக கடன் வாங்கும் நிறுவனங்களில் முக்கியமானது ஓஎன்ஜிசி விதேஷ் ஆகும். இது கடனை திருப்பி செலுத்துவதற்காக 600 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 250 மில்லியன் டாலர்களையும், ரிநியூ சோலார் உர்ஜா 147 மில்லியன் டாலர்களையும் திரட்டியது. இரு நிறுவனங்களும் இந்த நிதியை தங்களது வளர்ச்சிக்கு பயன்படுத்தும்.