2022 க்குள் புத்துயிர் பெறுமா இந்திய பொருளாதாரம்?
கோவிட் -19 பெருந்தொற்றால் மக்கள் பல இன்னல்களை சந்தித்தனர், , சந்திக்கின்றனர். இருப்பினும் State Bank of India தலைவர் தினேஷ் குமார் காரா, நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் மீண்டு வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் 3.3 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்தது என்றும், இந்த பெருந்தொற்று கணிசமான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வாழ்வாதாரத்தை சிதைத்து விட்டது என்கிறார் குமார்.
2021 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (gross domestic product) 7.3 சதவிகிதமாக குறைந்தது. மார்ச் 2021 முதல் பெருந்தொற்று வேகமாக அதிகரித்து வந்த நிலையில் நாடு கோவிட் -19 இன் இரண்டாவது அலையை சந்தித்தது என்று வங்கியின் 66வது Annual General Meeting-இல் உரையாற்றிய போது அவர் கூறினார்.
இந்த கடினமான காலங்களில் இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகள் (Policy Measures) மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகள் , வளர்ச்சியை மேலும் நீட்டிப்பதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளன என்று அவர் கூறினார். கோவிட்-19 இன் இரண்டாவது அலை மிகக் கடுமையானதாக இருந்த போதிலும், இந்திய பொருளாதாரம், அதன் பின்னடைவை முறியடித்து. 2022 நிதியாண்டில் ஒரு மீட்சிக்கு தயாராக உள்ளது, என்று வங்கியின் பங்குதாரர்களிடம் (shareholders) பேசியபோது அவர் கூறினார்.
நிதியாண்டு 2021-ல் வங்கியின் Performance குறித்து பேசிய அவர், கடந்த நிதியாண்டு விதிவிலக்குகள் கொண்ட, உலகம் முழுவதற்குமான சவாலான ஆண்டாக இருந்தாலும், அரசு நடத்தும் வங்கி, வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் சிக்கல்களைக் கொடுக்காமல் செயல்பட முடிந்தது என்றார்.
தொடர்ச்சியாக வகுக்கப்பட்ட பொருளாதாரத் திட்டங்கள் (business continuity plans) வங்கியின் வளர்ச்சிக்கு ஊக்குவித்தன. இது 2021 நிதியாண்டில் வங்கியின் செயல்திறன்களில் பல்வேறு வகைகளில் இது பிரதிபலிக்கிறது, என்று கூறினார்.
குறிப்பாக, 2021 ஆம் நிதியாண்டில் மொத்த பரிவர்த்தனைகளில் (Transactions) மாற்று முதலீடுகளின் (Alternate Channels) பங்கு 93 சதவீதமாக அதிகரித்து, சவாலான சூழ்நிலையை ஒரு வாய்ப்பாக மாற்றியதன் மூலம் வங்கியானது மிகப்பெரிய மின்னணு மயமாக்கலை (digitization) வெற்றிகரமாக அடைந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
நடப்பு நிதியாண்டில், “ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா” அதன் “டிஜிட்டல்” நிகழ்ச்சி நிரலை (Digital Agenda) தொடர்ந்து முடுக்கிவிடும் என்று கூறிய அவர், யோனோ செயலியின் (YONO – An integrated digital banking platform offered by SBI to enable users to access various financial and other services) நோக்கம் (scope) மற்றும் வாடிக்கையாளர் அணுகல் (reach) மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறினார். திவால் நிலை (Insolvency) தீர்வுகளுக்கான முன் தொகுப்பு, நீதிமன்றங்களை மீண்டும் தொடங்குதல் மற்றும் தேசிய சொத்து புனரமைப்பு நிறுவனத்தை (National Asset Reconstruction Company) உருவாக்குதல் ஆகியவற்றுடன், நடப்பு நிதியாண்டில் வலியுறுத்தப்பட்ட சொத்து மீட்சியில் (S tressed Asset Recovery) வேகத்தை தக்க வைக்க முயற்சிகள் முழு அளவில் மேற்கொள்ளப்படும், என்றார்.
வங்கியின் வளர்ச்சி, மூலதனத்தின் அடிப்படையில் பாதுகாப்பான நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நம்பிக்கைக்குரிய துறைகளில் கடன் வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ள “Portfolio”வை மேன்மைப்படுத்தவும், ஆபத்தைக் கட்டுப்படுத்தவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும், என்ற அவர் இறுதியாக, கோவிட்-19 தொற்றுநோயால் முன்வைக்கப்பட்ட சவால்களைக் கடந்து வங்கி வளர்ச்சி நிலையை அடைந்திருக்கிறது என்றும் அடுத்தடுத்த அலைகளை சமாளிக்க சிறந்த திறன்களோடு தயார் நிலை உள்ளது என்றும் கூறினார். 2021 ஆம் நிதியாண்டின் மூலதன வளர்ச்சிப் பாதை (Growth Capital) 2022 ஆம் நிதியாண்டிலும் தொடரும் என்று நான் நம்பிக்கை தனக்கு இருப்பதாக குமார் தெரிவித்தார்.