வரலாறு படைத்த இந்திய பங்குச்சந்தைகள்..
டிசம்பர் 11 ஆம் தேதி,வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சங்களை தொட்டு வரலாறு படைத்திருக்கின்றன. மும்பைபங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இதுவரை இல்லாத வகையில் முதன் முறையாக 70 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகம் நடைபெற்றது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 21 ஆயிரம் புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை எட்டின. மருந்துத்துறையைத் தவிர்த்து மற்ற துறைகளில் அதிகளவில் முதலீடுகள் குவிந்தன.
வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறீயீட்டு எண் சென்செக்ஸ் 109 புள்ளிகள் உயர்ந்து 69,928 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதேபோல் தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 27 புள்ளிகள் உயர்ந்து 20ஆயிரத்து 997 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. UPL, UltraTech Cement, Bajaj Auto, Adani Enterprises,LTIMindtree ஆகிய நிறுவனங்களின் பங்குகள் மிகப்பெரிய லாபத்தை பதிவு செய்தன. Dr Reddy’s Laboratories, Cipla, Axis Bank, BPCL,M&M ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தன. பொதுத்துறை வங்கிகள், ஆற்றல், உலோகம்,ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளின் பங்குகள் அரை முதல் 1 விழுக்காடு வரை ஏற்றம் கண்டன. மருந்துத்துறை பங்குகள் மட்டும் 0.4விழுக்காடு குறைந்திருக்கிறது. Aptus Value, Ashoka Buildcon, Century Plyboard, Cheviot Company, Dixon Technologies, GMR Airports. Inox Wind, Jindal Steel, J&K Bank, NOCIL, Patel Engineering, Polycab, Puravankara, Sandur Manganes, SpiceJet, Subros, Wockhardt ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 52 வாரங்களில் இல்லாத உச்சத்தை பெற்றுள்ளன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்திருக்கிறது. ஒரு கிராம் தங்கம் 15 ரூபாய் குறைந்து 5750 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 46,000ரூபாயாக விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து 77ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி விலை 200 ரூபாய் குறைந்து 77 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலைகளுடன் 3விழுக்காடு ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி, சேதாரம் சேர்க்கப்படவேண்டும். ஆனால் செய்கூலி, சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தங்கத்தைப்போலவே , தங்கப்பத்திரங்களிலும் முதலீடு செய்வதை மக்கள் பரிசீலிக்கலாம்.