மாலத்தீவை தவிர்க்கும் இந்தியர்கள்..
இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவுக்கு இந்தியர்கள் சுற்றுலா செல்லும் விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சகம் புள்ளி விவரத்தை வெளியிட்டு இந்தியர்கள் வருகை குறைந்துள்ளதை உறுதிபடுத்தியுள்ளது. இந்தியாவுக்கும் -மாலத்தீவுக்கும் இடையே அரசியல் பிரச்னை நிலவி வருவதன் காரணமாக மாலத்தீவுக்கு செல்லும் வெளிநாட்டினர் பட்டியலில் இந்தியர்களின் எண்ணிக்கை 5 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்தாண்டு மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றோரின் எண்ணிக்கையில் , இந்தியர்கள் முதலிடத்தில் இருந்தனர். இந்தாண்டின் முதல் மாதத்தில் மாலத்தீவுக்கு அதிகம் சென்றோர் பட்டியலில் ரஷ்யர்கள் முதலிடத்தில் உள்ளனர். அதாவது ஜனவரி மாதத்தில் 18,561 ரஷ்யர்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக 18,111 இத்தாலி நாட்டவர் மாலத்தீவுக்கு சென்றனர், 3 ஆவது இடத்தில் சீனர்களும், 4 ஆம் இடத்தில் பிரிட்டன்காரர்கள், ஐந்தாவது இடத்தில்தான் இந்தியா உள்ளது(13,989பேர்) ஜனவரியில் மாலத்தீவு சென்றுள்ளனர். பிரதமர் மோடி 2 ஆம் தேதி மாலத்தீவு சென்றுவந்த பிறகு அந்நாட்டு அரசியலில் குழப்பம் நிலவியது. இதையடுத்து சீனாவுடன் மாலத்தீவு நெருக்கம் காட்டியது. இந்தியாவுக்கு பதிலாக, சீனாவுடன் நெருக்கத்தை அந்நாடு கடைபிடித்துள்ளது. அந்நாட்டில் கடந்த நவம்பரில் புதிதாக பதவியேற்ற அதிபர் Muizzu, இந்திய படைகளை வெளியேற்ற ஆணையிட்டார். இந்தியா , சீனா என இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ளதால் மாலத்தீவுக்கு செல்லும் இந்திய பெருங்கடல் பகுதியில் சமநிலையற்ற சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக சுற்றுலாத்தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.