அதெல்லாம் ஒன்னுமே ஆகாது ஆமா…
டிரெயின்மேன் என்ற நிறுவனம் இந்தியாவில் ரயில் டிக்கெட்டுகளை விநியோகிக்கும் பணிகளில் ஒரு நிறுவனமாக செயல்படுகிறது. இந்த நிலையில் அதனை பிரபல தொழிலதிபர் அதானி வாங்கியுள்ளார். இதனை சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், இது ஐஆர்சிடிசிக்கு பாதகத்தை ஏற்படுத்தலாம் என்று கூறியிருந்தார். இதனை மறுத்து ஐஆர்சிடிசி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜெய்ராம் ரமேஷின் கருத்துகளை மறுத்துள்ளது. டிரெயின்மேன் நிறுவனத்தை அதானி வாங்கியதன் மூலம் எந்த பெரிய பாதிப்பையும் ஏற்படுத்த இயலாது என்று கூறியுள்ளது. ஜெய்ராம் ரமேஷ் கூறும் கருத்து உண்மைக்கு புறம்பானாது என்றும் தவறான கருத்து என்றும் ஐஆர்சிடிசி கூறியுள்ளது. டிரெயின்மேன் என்ற நிறுவனம் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் ரயில் எங்குள்ளது.PNR நிலைகளை அறிந்துகொள்ள இயலும். இந்த நிறுவனத்தை அதானி டிஜிட்டல் லேப்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஐஐடி நிறுவனத்தில் படித்த வினீத் மற்றும் கரன் குமார் ஆகியோர் டிரெயின்மேன் நிறுவனத்தை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.