வரும் 1ம் தேதி முதல் மருந்து விலை உயரப்போகுது…
வலி நிவாரணிகள்,ஆண்டிபயாடிக் மருந்துகள் மற்றும் நோய் தொற்று எதிர்ப்பு மருந்துகளின் விலை வரும் சனிக்கிழமை(ஏப்ரல் 1ம் தேதி) முதல் உயரப்போகிறது. அதுவும் கொஞ்சம் நஞ்சமல்ல 12 %க்கும் அதிகமாக விலை உயர்கிறது. 800க்கும் மேற்பட்ட மருந்துகள் விலையேற்றம் காண இருக்கின்றன. விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு கடந்தாண்டே மருந்துகளின் விலையை 10.7% மருந்து விலைகள் உயர்த்த அரசு அனுமதித்தது. இந்த நிலையில் இந்த முறை அதைவிட அதிகமாக விலை ஏற இருக்கிறது. All India Drugs Action Network என்ற அமைப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.2013ம் ஆண்டுக்கு பிறகு உயர்த்தப்பட்ட மிகப்பெரிய தொகை இதுவாகும்.இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட கோரிக்கை வலுத்துள்ளது. ஒரே அடியாக விலையை ஏற்றாமல் படிப்படியாக மருந்துவிலையை உயர்த்தவும் கோரிக்கை எழுந்துள்ளது. திடீரென விலை உயர்ந்தால் மருந்துகளை வாங்கவே மக்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்றும் மருந்து உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்கையில்,அடிப்படை உற்பத்தி விலை எல்லாம் உயர்ந்துவிட்டது. எனவே மருந்து விலைகளை ஏற்றித்தான் ஆகவேண்டியுள்ளது என்று மருந்து தயாரிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.