சிறு குறு நிறுவனங்களுக்கு கடன் அளிக்கும் திட்டத்தை விரிவுபடுத்தும் மெட்டா
பேஸ்புக்கின் தாய் நிறுவனம் மெட்டா. இந்நிறுவனம், இந்தியாவில் சிறிய ரக வியாபாரங்களை வளர்க்கும் நோக்கில், கடன் திட்டத்தை உடனே விரிவுபடுத்த உள்ளது என பேஸ்புக் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் அஜித் மோகன் தெரிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக விளம்பரம் செய்வோர் emi எனும் மாத தவணையில் பணம் செலுத்த முடியும். 200 நகரங்களில் இந்த வசதி கிடைக்க உள்ளது.
இந்த திட்டத்துக்கு flexi loans மற்றும் indifi தளங்களுடன் பேஸ்புக் கைகோர்த்து உள்ளது. 19 ஆயிரம் பின்கோடு உள்ள இடங்களுக்கு இந்த திட்டம் விரிவடைகிறது. சிறு, குறு நிறுவனங்களுடன் ஆலோசித்து, இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்றும் மோகன் கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள 6 கோடி சிறு வணிகர்களை குறி வைத்து இந்த மாத தவணை விளம்பர திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்றார். இவ்வகை திட்டத்தை இந்தியாவில் முதல் முறையாக பேஸ்புக் தொடங்க உள்ளதாகவும் கூறினார். இதற்கு முன்பாக reels வசதியும் இந்தியாவில் தான் முதலில் களமிறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.