இந்தியாவுக்கு வரத்துடிக்கும் மஸ்க்…
அமெரிக்காவிக்கு பிரதமர் மோடி அரசு முறை பயணமாக சென்றார். அங்கு பிரபல தொழிலதிபர்கள்,மற்றும் பல்வேறு துறை பிரபலங்களை சந்தித்தார். இதன் ஒருபகுதியாக டிவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளரும், டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்கை சந்தித்து பேசினார். பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எலான் மஸ்க்,தாம் ஒரு மோடி ரசிகன் என்றார். இந்தியாவுக்கு விரைவில் வர இருப்பதாகவும், மின்சார கார்கள் உற்பத்தியை இந்தியாவில் தொடங்க ஆர்வமாக இருப்பதாகவும் மஸ்க் தெரிவித்தார். இந்தியாவில் மின்சார பேட்டரியில் இயங்கும் காரை அறிமுகப்படுத்த துடியாய் துடிக்கும் மஸ்கிற்கு இந்திய அரசு இதுவரை உரிய பிடி கொடுக்காமல் இருந்து வருகிறது. அண்மையில் இந்தியாவுக்கு கார் உற்பத்திக்கு வரும்படி பிரபல யூடியூபர் ஒருவர் மஸ்கை அழைத்தபோது கூட மஸ்க் வரத் தயாராக இருப்பதாகவும், ஆனால் வரிகள் அதிகம் இருப்பதாகவும் மஸ்க் குறிப்பிட்டிருந்தார். மேலும் விரைவில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை இந்தியாவில் தொடங்க இருப்பதாகவும் எலான் மஸ்க் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.