லிஸ்டில் இருக்கும் அடுத்த 3 நாடுகள்!!!!
உலகளவில் பிரபலமாக உள்ள நிறுவனம் நோமுரா ஹோல்டிங்க்ஸ் நிறுவனம், இந்த நிறுவனம் நாடுகளின் நிலை மற்றும் நிதி சூழல் குறித்து அவ்வப்போது புள்ளி விவரங்களை வெளியிட்டு கவனம் ஈர்த்து வருகிறது இந்த நிலையில் 8 காரணிகளை அடிப்படையாக கொண்டு நாடுகளின் நிலை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது வெளிநாட்டுப்பபண கையிருப்பு,குறுகிய கால கடன் விகிதம் மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை ஆகியவை இந்த காரணிகளில் முக்கியமானதாக உள்ளன. 32 பங்குச்சந்தைகளை ஆராயந்த இந்நிறுவனம்,பண சிக்கல் ஏற்படும் அபாயம் குறித்தும் விரிவாக பேசியுள்ளது
எகிப்து, இலங்கை,துருக்கி, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே சிக்கலில் உள்ளதாகவும்,அவை மெல்ல மெல்ல
மீண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இருப்பதிலேயே மோசமான சிக்கலை ஹங்கேரி சந்தித்து வருவதாகவும்,ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி நிறுத்தப்பட்டதும் இந்த நாடு மிகப்பெரிய சிக்கலை அடுத்தாண்டு சந்திக்கும் என்றும் நோமுரா எச்சரித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகராக ரூமேனியா மற்றும் செக் குடியரசு நாடுகளின் பணமும் சுமார் 8% குறைந்திருக்கிறது. சந்தையில் அதிகரித்து வரும் பிரச்னைகளால் குறிப்பிட்ட சில தேசங்களே பெரிய சவால்களை சந்திக்க நேரிடும் என்றும் அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.