நிதி நெருக்கடியை எதிர்கொள்ள பணத்தை அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா சீதாராமன்
வல்லுநர்களும் நிபுணர்களும் COVID-19 பரவுவதால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளைக் கையாள்வதற்கும், வேலை இழப்பு அபாயங்களை சமாளிப்பதற்கும் பணத்தை அச்சிட அரசாங்கத்தை பரிந்துரைத்துள்ளனர். COVID-19 தொற்றுநோய் மூலம் தூண்டப்பட்ட தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தடுக்க பணத்தை அச்சிடும் திட்டம் அரசாங்கத்திற்கு இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2020-21யில் இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product-GDP) 7.3% என்ற அளவில் சுருங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று மக்களவைக்கு (Lok Sabha) எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் சீதாராமன் தெரிவித்தார். இந்த சுருக்கம் தொற்றுநோயின் கடுமையான விளைவையும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் பிரதிபலிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.
பொது முடக்கத்தை படிப்படியாகக் குறைப்பதால் பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக உள்ளது, “ஆத்மநிர்பர் பாரத்” திட்டத்தின் உதவியால் 2020-21 நிதிஆண்டின் இரண்டாம் பாதியில் பொருளாதாரம் மீண்டு வரும் பாதையில் உள்ளதாக அவர் கூறினார். தொற்றுநோயின் தாக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், பொருளாதார வளர்ச்சியைப் புதுப்பிப்பதற்கும், 2020-21 காலப்பகுதியில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும் ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் ₹29.87 லட்சம் கோடி சிறப்பு பொருளாதார மற்றும் விரிவான திட்டத்தை அரசு வழங்கியதாக சீதாராமன் கூறினார்.
2021-22-க்கான மத்திய பட்ஜெட்டில், பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதற்காக பல நடவடிக்கைகள் செய்யப்பட்டதாகவும், மூலதன செலவினங்களில் (capital expenditure) 34.5 சதவீதமும் சுகாதார செலவினங்களில் (health expenditure) 137 சதவீதமும் அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளன என்று சீதாராமன் கூறினார். கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் விரைவான தடுப்பூசி முயற்சிகளால் இரண்டாவது அலையின் தாக்கம் முடக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
மார்ச் 2022 உடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டில், மத்திய பட்ஜெட் 2021-22இல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சி 14.4% என்றுமதிப்பிடப்பட்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.5 சதவீதமாக உயரும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது எனவும் சீதாராமன் கூறினார்.
சிறு நிதி வங்கிகளுக்கு (Small Finance Banks) ரெப்போ (repo rate) -விகிதம் என்பது ஒரு நாட்டின் மத்திய வங்கி (இந்தியாவின் விஷயத்தில் இந்திய ரிசர்வ் வங்கி) வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் சதவீதமாகும், விகிதத்தில் ₹10,000 கோடி ரூபாய் சிறப்பு மூன்று ஆண்டு நீண்ட கால ரெப்போ நடவடிக்கைகளை (Special three-year Long-Term Repo Operations) ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார். கடன் வாங்குபவருக்கு ₹10 லட்சம் வரை புதிய கடன் வழங்குவதற்காக இது பயன்படும். இந்த நிதி ஆதாரமானது, சிறு வணிக அலகுகள் (small business units), மைக்ரோ மற்றும் சிறு தொழில்கள் (micro and small industries) மற்றும் தொற்றுநோயின் அலைகளால் பாதிக்கப்பட்ட பிற துறை நிறுவனங்களுக்கு உதவும் வகையில் திட்டமிடப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.