இப்போது இருப்பது பத்தாது!!!
கனரக ஆலைகளுக்கான அமைச்சரவை அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் 2023ம் ஆண்டு
ஏப்ரல் மாதத்துக்கு பிறகு, மின்சார கார்களுக்கு புதிய பரிசோதனைகள் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
பேட்டரி பேக், பேட்டரிமேனேஜ்மண்ட் சிஸ்டம் மற்றும் செல் ஆகிய 3 நிலைகளில் மின்சார வாகனங்களை பரிசோதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மின்சார கார்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் திடீரென தீப்பிடித்து எரிவதால், உயிரிழப்புகள் அதிகரிக்கும் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு இதனை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை பெறும் மின்சார கார் நிறுவனங்கள், மத்திய அரசு நிர்ணயித்துள்ள சோதனைகளில் வெற்றி பெற வேண்டியது
கட்டாயமாக்கப்பட்டுள்ளது. செல் நிலையில் 6 சோதனைகளும், பிஎம் எஸ் நிலையில் 10 பரிசோதனைகள் மற்றும் பேட்டரி பேக் நிலையில் 5 பரிசோதனைகளை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த சோதனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன என்றும் கனரக ஆலைகளின் அமைச்சகம் தெரிவித்துள்ளது.