பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்த இலங்கை
கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து உள்ளது. அதுவும், பெட்ரோல் லிட்டருக்கு 20 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 20 ரூபாய் என்று குறைக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பான அறிக்கையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால், பெட்ரோல் விலையும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல், இரண்டு ஏக்கருக்கும் குறைவாக, விவசாய நிலங்களில் பயிர் செய்த விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படுவதாக இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு, தேவையான நிவாரணங்களை எதிர்காலத்தில் வழங்க உள்ளதாகவும் கூறியுள்ளார். சர்வதேச நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாகவும், வெளிநாடுகள் உடனான உதவிக்கான ஆலோசனைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ரணில் விக்ரமசிங்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.