ப்ளீஸ்.. இனி இதை விற்காதீங்க!!!
இந்தியாவில் 4 நிமிடங்களுக்கு ஒருவர் விபத்தில் உயிரிழக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அண்மையில் சாலை விபத்தில் உயிரிழந்த டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரியின் மரணம் பல முக்கிய பிரச்சனைகளை முன் வைத்துள்ளது. சாலை விபத்தில் அவர் உயிரிழந்ததற்கு சீட் பெல்ட் அணியாமல் இருந்ததே காரணம் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் அமேசான் இணையதளத்தில் சீட்பெல்ட் அணியாவிட்டாலும் அனிந்தபடி காட்டும் சீட் பெல்ட் அலாரம் பிளாக்கர்ஸ் கிளிப்கள் பற்றி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருத்து தெரிவித்துள்ளார். அதில் சீட் பெல்ட் அலாரம் பிளாக்கர்ஸ் விற்பனையை நிறுத்த வேண்டும் என்று அமேசான் நிறுவனத்துக்கு நிதின் கட்கரி அறிவுறுத்தியுள்ளார். மேலும் வரும் காலங்களில் அனைத்து வகை கார்களிலும் 6 ஏர் பேக் வசதி இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்திய அரசு 2024ம் ஆண்டுக்குள் சாலை விபத்தால் ஏற்படும் மரணங்களை பாதியாக குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.