புகையிலையையும் மத்த பயிர்களைபோல பாருங்க பிளீஸ்…!!!
வரும் பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கலாக இருக்கிறது. அந்த நேரத்தில் அனைத்து துறைகளுக்குமான அறிவிப்புகள் வர உள்ளன. இந்த சூழலில் மத்திய நிதியமைச்சகத்துக்கு அனைத்திந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளது. அதில்,மற்ற விவசாய பயிர்களைப் போலவே புகையிலை பயிரிடுவதிலும் நிறைய பிரச்னைகள் இருப்பதாகவும், அதற்கென கூடுதல் வரிகள் விதிப்பது குறித்தும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகம் மற்றும் குஜராத்தில் இத்தகைய பணப்பயிர்களை விவசாயம் செய்யும் விவசாயிகள் தங்களுக்கு கூடுதல் வரி சுமை கடுமையாக பாதிப்பதாகவும்,விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, வரும் பட்ஜெட்டில் உள்ளூர் புகையிலை உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக சலுகைகள் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. உள்ளூர் புகையிலைக்கு அதிக வரிகள் விதிப்பதால் சட்டவிரோதகமாக விற்பனை செய்யும் சிகிரெட்டில் இந்தியா உலகளவில் 4ம் இடத்தில் உள்ளதாகவும், உள்ளூர் விவசாயிகளுக்கு ஆதரவாக நல்ல முடிவு தரவேண்டும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.