நிதான வேகம் நிலையான வளர்ச்சி..!!!!
ஆகஸட் 7 ஆம் தேதி இந்திய பங்குச்சந்தைகளில் லேசான உயர்வு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 232 புள்ளிகள் உயர்ந்து 65,953 புள்ளிகளாக உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 80 புள்ளிகள் உயர்ந்து 19,597 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. தொடக்கத்தில் லாபகரமாக தொடங்கிய பங்குச்சந்தைகள், ஒரு கட்டத்துக்கு மேல் நஷ்டத்தை சந்தித்து முதல் பகுதியை நிறைவு செய்தன. பங்குச்சந்தைகளில் இரண்டாவது பகுதியில் ஏராளமான பங்குகள் வாங்கப்பட்டதால் முதல்பாதியில் நிலவிய சரிவு சீரடைந்தது.Divis Laboratories, Mahindra & Mahindra, SBI Life Insurance ,Adani Ports உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்தில் முடிந்தன. Britannia Industries, Tata Motors, Bajaj Auto, State Bank of India,Axis Bank உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவில் முடிந்தன. சுகாதாரத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் தலா 1விழுக்காடு அளவுக்கு உயர்வில் முடிந்தன. ரியல் எஸ்டேட் துறை பங்குகள் அரைவிழுக்காடு வரை உயர்ந்தன.பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் 0.6% சரிந்தன. Gravita India, Zomato, Patel Engineering, C.E. Info Systems, NBCC, Lupin, RateGain Travel Technologies, CSB Bank, KPIT Technologies உள்ளிட்ட நிறுவனங்கள் 52 வாரங்களில் இல்லாத உச்சத்தை தொட்டுள்ளன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சனிக்கிழமை விலையில் மாற்றமின்றி விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் 5555 ரூபாயாகவும் , ஒரு சவரன்தங்கம் 44ஆயிரத்து 440 ரூபாயாகவும் விற்பனையாகிறது, வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து 78 ரூபாய் 30 காசுகளாக உள்ளது. கட்டி வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து 78,300 ரூபாயாகவிற்பனையாகிறது. இந்த விலையுடன் 3%ஜிஎஸ்டி, செய்கூலி சேதாரத்தை சேர்த்தால்தான் உண்மையான விலை நிலவரம் தெரியவரும். ஆனால் செய்கூலி, சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.