ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்” – IPO நிலவரம் !
இந்தியாவின் ‘வாரன் பபெட்’ என்று அழைக்கப்படும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா ஆதரவு பெற்ற ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் கம்பெனியின் ஐபிஓ வெளியீடு நவம்பர் 30ந் தேதி தொடங்கியது. இன்று கடைசி நாள் ஆகும். 4.49 கோடி ரூபாய்க்கு 99.86 இலட்சம் ஈக்குவிட்டி பங்குகளை விற்றது. விற்பனையின் கடைசி நாளான இன்று 22 சதவீத சந்தாதாரர்கள் கிடைத்துள்ளனர்.
ஸ்டார் ஹெல்த் நிறுவனம் 7,249 திரட்ட திட்டமிட்டுள்ளது
அதன் ஒரு பங்கின் விலை 870 ரூபாயில் இருந்து 900 ரூபாய் வரை நிர்ணயித்துள்ளது. ஆஃபர் ஃபார் சேல்ஸ் மூலமாக 5,249 ஆயிரம் கோடியும், புதிய பங்கு வெளியீட்டின் மூலம் 2 ஆயிரம் கோடி நிதியையும் திரட்ட திட்டமிட்டுள்ளது.