ஸ்டார் ஹெல்த் – IPO – நிலவரம் !
ராகேஷ் ஜூன்ஜூன்வாலா வால் விளம்பரப்படுத்தப்பட்ட ஸ்டார் ஹெல்த் மற்றும் அலைட் இன்சூரன்ஸ் நிறுவனம், டிசம்பர் 10 அன்று 6 சதவீத தள்ளுபடியுடன் பட்டியலிடப்பட்டதால், பங்குச்சந்தைகளில் அதன் பங்குகள் ஏமாற்றமளிக்கிறது.
பங்குகளின் விலை , பிஎஸ்இ-யில் ரூ.900-லிருந்து குறைந்து ரூ.848-ல் தொடங்கப்பட்டது, தேசிய பங்குச் சந்தையில் தொடக்க விலை ரூ. 845 ஆக இருந்தது. நவம்பர் 30 ந் தேதி ஆரம்பித்த ஸ்டார் ஹெல்த் ஐபிஓ, டிசம்பர் 2ந் தேதி வரை 79 சதவீதம் சந்தா பெற்றுள்ளது. ஒரு ஈக்விட்டி பங்கின் விலை 870 லிருந்து 900 ரூபாய் வரை அது நிர்ணயித்து இருந்தது.
2006 இல் இணைக்கப்பட்ட ஸ்டார் ஹெல்த், 2021 நிதியாண்டில் 15.8 சதவீத சந்தைப் பங்கைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய தனியார் சுகாதார காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாகும், தனிப்பட்ட முகவர்கள் மூலமாகவும், வங்கிகள் மற்றும் பிற கார்ப்பரேட் முகவர்கள் மூலமாகவும் பாலிசிகளை விநியோகிக்கிறது. செப்டம்பர் 2021 நிலவரப்படி, அதன் நெட்வொர்க் விநியோகம் 25 மாநிலங்கள் மற்றும் ஐந்து யூனியன் பிரதேசங்களில் 779 கிளைகளை உள்ளடக்கியது. ஸ்டார் ஹெல்த் 11,778 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுடன் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு மருத்துவமனை நெட்வொர்க்குகளில் ஒன்றாக உருவாகியுள்ளது.