ஆலமரம்போல் உலகமெங்கும் பறந்துவிரியும் டாடா நிறுவனம்
நடுத்தர மக்களின் வாழ்வியலுடன் கலந்துவிட்ட டாடா குழுமத்தின் வணிகம் என்பது இந்தியாவில் மட்டும் அல்ல தற்போது வெளிநாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. ஸ்பெயின் மற்றும் பிரிட்டனை பரிசீலித்து வரும் டாடா குழுமம், எங்கு கார்களுக்கான பேட்டரி ஆலைகளை நிறுவுவது என்று ஆலோசித்து வருகிறது. இந்தியாவைப் போலவே ஐரோப்பாவிலும் வணிகத்தை தீவிரப்படுத்த டாடா திட்டமிட்டு வரும் நிலையில் ஐரோப்பாவில் கார் வணிகத்தை பிரபலப்படுத்த காய் நகர்த்தப்பட்டு வருகிறது. பிரிட்டன் மற்றும் ஸ்லோவாக்கியாவில் ஏற்கனவே டாடா குழுமத்தின் ஆலைகள் உள்ள நிலையில் ஸ்பெயின் நாடு தற்போது டாடாவின் பரிந்துரையில் உள்ளது. ஸ்பெயினின் zuera நகரில் உற்பத்தி ஆலையை டாடா குழுமம் துவங்க இருப்பதாகவும் மற்றொரு நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு மின்சாதன கார்கள் உற்பத்தியை ஊக்கப்படுத்த, அந்நாட்டு அரசு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இதனால் டாடா குழுமம் அங்கே அதிக தொகையை முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.