1 லட்சம் பேருக்கு வேலை தர காத்திருக்கும் நிறுவனம்..
பிரபல கோழி இறைச்சி சார்ந்த உணவு விற்பனை நிறுவனமாக திகழ்வது கேஎப்சி என்ற அமெரிக்க பூர்விக நிறுவனம்.
இந்த நிறுவனம் இந்தியாவில் தனது ஆயிரமாவது கிளையை அண்மையில் திறந்துள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் இந்த நிறுவனம் வேகமாக தனது கிளைகளை திறந்து வருகிறது. 1995 ஆம் ஆண்டு தனது முதல் கடையை இந்தியாவில் தொடங்கிய கே.எப்.சி நிறுவனம், அடுத்து வரும் நாட்களில் மேலும் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க இருப்பதாகவும் கூறியிருக்கிறது. இந்தியாவில் கே.எப்.சி நிறுவனத்தை இயக்கி வரும் யம் ரெஸ்டரான்ட்ஸ் நிறுவனம் ,கே.எப்.சிக்கு அடுத்தபடியாக 800 கிளைகளில் பிசா ஹட் கடைகளையும் நடத்தி வருகிறது. உலகளவில் பல சிக்கல்கள் நிலவிவந்தாலும், கே.எப்.சி இந்தியாவில் சிறப்பாக இயங்கி வருகிறது. அதேநேரம் பிசா ஹட் நிறுவன விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. இந்தியாவில் செப்டம்பரில் விலைவாசி கடுமையாக உயர்ந்திருந்ததால் பல நிறுவனங்கள் சிக்கலை சந்தித்தன.
செப்டம்பருடன் முடிந்த காலாண்டில் கே.எப்.சி பங்குகள் 4%, பிசா ஹட் நிறுவன பங்குகள் 10% விற்பனை குறைந்தன.
2023 நிதியாண்டு முதல் 2025 நிதியாண்டு வரை சந்தை மூலதன செலவு மட்டும் 5 ஆயிரத்து 800 ரூபாய் வரை செலவாகலாம் என்றும் அதே நேரம் இந்த காலகட்டத்தில் 2,300 கடைகளை இது போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் திறக்க வாய்ப்பிருப்பதாக ICRAஅமைப்பு கணித்திருக்கிறது. நிலைமை இப்படி இருக்கையில் செவி மற்றும் பேச்சு குறைபாடு உள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க பணிகள் நடப்பதாக அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.