சில பணக்காரர்களுக்கு வந்த சோதனை..
மிகப்பெரிய வங்கி கிளைகளை வைத்திருக்கும், சர்வதேச வங்கிகளிடம் இருந்து, வசதி படைத்த இந்திய பணக்காரர்களுக்கு தகவல் வந்திருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் மற்றும் குறைந்தபட்ச பேலன்ஸ் அதிகரிப்பு உள்ளிட்ட காரணிகளால், வசதி படைத்த இந்தியர்கள் சிலருக்கு, வங்கிக்கணக்குகளை மூடக் கோரி, தகவல் வந்திருக்கிறது. குறிப்பாக பிரிட்டன் மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள் மொத்தம் 24க்கும் அதிகமான இந்தியர்களுக்கு, கடந்த 2 மாதங்களில் கடிதம் அனுப்பியுள்ளது. LRS முறைப்படி, பெரிய தொகையை வெளிநாடுகளுக்கு வசதி படைத்தவர்கள், எடுத்துச்சென்றதாக கூறப்படுகிறது. வழக்கமாக இந்த முறைப்படி, ஓராண்டில், 2 லட்சத்து 50ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு மட்டுமே பணத்தை எடுத்துச்செல்ல ரிசர்வ் வங்கி அனுமதிக்கும். அப்படி எடுத்துச்சென்றாலும், 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள், குறைந்தபட்ச பேலன்ஸ் ஆக, பன்னாட்டு வங்கிகளின் கணக்கில் வைத்திருக்க வேண்டுமாம். அண்மையில் விதிகளை பின்பற்றாத வசதி படைத்த இந்தியர்களின் கணக்குகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் மூடப்பட்டன. வெளிநாடுகளில் மூடப்படும் கணக்குகளில் உள்ள தொகையை, 180 நாட்களுக்குள் இந்தியாவிற்குள், முதலீடு செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி விதி உள்ளது. அண்மையில் சிங்கப்பூரைச் சேர்ந்த சில வங்கிகள் இந்திய வாடிக்கையாளர்களிடம், இதே டீல் பேசின. வெளிநாட்டில் இந்தியர்களின் கணக்குகள், குறைந்தபட்ச பேலன்ஸ் கூட இல்லாமல் நிர்வகிக்கப்படுவதை பல வங்கிகளும், விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதுபோன்ற சர்ச்சையில் சிக்கும் நிறுவனங்கள், தனிநபர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருக்கிறது. வெளிநாடுகளுக்கு பணம் செல்வதை தடுக்கும் வகையில்தான் ரிசர்வ் வங்கியின் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. LRS முறைப்படி, பணத்தை வெளிநாட்டில் வைத்திருப்போருக்கு, பன்னாட்டு வங்கிகளின் சமீபத்திய நடவடிக்கைகள் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது