Prepaid Recharge Plan Validity 30 நாட்கள் இருக்க வேண்டும் – TRAI உத்தரவு..!
மொபைல் ஃபோன் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, Prepaid Recharge Plan-களின் Validity காலம் 30 நாட்களாகவது இருக்க வேண்டும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI உத்தரவிட்டுள்ளது.
13-முறை Recharge செய்வதால் ஏமாற்றம்:
நாடு முழுவதும் அனைத்து தரப்பினருக்கும் மிகவும் அவசியமான தொலைத்தொடர்பு சாதனமாக மொபைல் ஃபோன்கள் உள்ளன. வாடிக்கையாளர்களை கவர்வதற்காக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கவர்ச்சிகரமான திட்டங்களுடன் பல்வேறு Plan-களை அறிவித்து வருகின்றன. ஆனால், Prepaid Recharge Plan-களின் Validity காலம் தற்போது 28 நாட்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகின்றனஓராண்டுக்கு 13 முறை Recharge செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், தாங்கள் ஏமாற்றப்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI உத்தரவு:
இதையடுத்து, Prepaid Plan-களின் செல்லுபடியாகும் காலஅளவு 30 நாட்களாவது இருக்க வேண்டும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவிட்டுள்ளது. Voucher, Special Tariff Voucher, Combo Voucher ஆகியவற்றில் தலா ஒன்றின் செல்லுபடியாகும் காலத்தையாவது 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் ஓராண்டுக்கு Prepaid Plan-களை Recharge செய்வது 12-ஆக குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.