இதற்கு நாங்கள் எதிரி..சொல்கிறார் அமைச்சர் பியூஷ் கோயல்
இ-ரீட்டெய்லர்கள் என்பவர்கள் ஒரு பொருளை இணைய வழியில் விற்கும் விற்பனையாளர்கள். அண்மையில் வாடிக்கையாளர்களை ஈர்க்க ஆஃபர் என்ற பெயரில் மிகக்குறைவான விலைக்கு ஆன்லைனில் சிலர் விற்கின்றனர். இது பற்றி மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு பதில் அளித்த அமைச்சர். பிரேடட்டர் வகை விலை நிர்ணயம் அதாவது தனது பொருளை மட்டுமே மக்கள் வாங்க வேண்டும் என்று நிர்ணயிக்கும் நிறுவனங்களுக்கு தாங்கள் எதிரி என்று தெரிவித்துள்ளார். சில மின்வணிக நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீட்டு விதிகளை மீறி செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்களை வேறு பொருட்கள் வாங்க விடாமல் அவர்களுக்கு சாய்ஸ் அளிக்க விடாமல் தடுப்பதைத் தான் தவறு என்றும் அமைச்சர் கூறியுள்ளார். சில கோடிகள் நஷ்டமடைந்தாலும் பரவாயில்லை ஆனால் வாடிக்கையாளர்களை பிடிக்க வேண்டும் என்று சில நிறுவனங்கள் நினைப்பதாக கூறியுள்ள அமைச்சர். சிறு வணிகர்களை பாதுகாக்க அரசாங்கம் எல்லா முயற்சிகளையும் எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவோ வெளிநாட்டு முதலீட்டாளரோ யாராக இருந்தாலும், இந்திய சிறு வணிகர்களை பாதுகாக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.