இதையும் விற்கலாம்னு இருக்கோம்.. யாருக்காவது வேணுமா?
கடன் சுமையில் சிக்கித்தவித்த ஐடிபிஐ வங்கியை தனியாருக்கு விற்க கடந்த 2016ம் ஆண்டே மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. இந்த வங்கியின் பங்குகளை விற்பதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அண்மையில் எல்ஐசியின் பங்குகள் விற்கப்பட்டதை போல அடுத்தபடியாக ஐடிபிஐ பங்குகள் விற்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 60 ஆண்டுகளில் ஐசிஐசிஐ வங்கியும், ஐடிபிஐ வங்கியும் ஒப்பீட்டு அளவில் பார்த்தால், ஐசிஐசிஐ வங்கி பின்பற்றிய உத்திகள் சிறப்பாக இருந்துள்ளது. இந்நிலையில் ஐடிபிஐ வங்கிகளின் உரிமை தற்போது எல்ஐசி வசம் உள்ளன.
வங்கிகளுக்கு சிறு கடன்களை வழங்கி வந்த ஐசிஐசிஐ வங்கி 1994ம் ஆண்டு வங்கிக்கான உரிமத்தை பெற்றதும் அதன் கடன் வழங்கும் முறைகள் உலகளவில் கவனத்தை ஈர்த்தன. ஆனால் தொடர் கடன்களால் ஐடிபிஐ வங்கி திவாலாகியுள்ளது. அண்மையில் ஏர் இந்தியாவை தனியார்மயப்படுத்திய அதே பாணியில் ஐடிபிஐ வங்கியின் பங்குகள் விற்கப்பட அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 60 ஆண்டுகளில் பல்வேறு நிறுவனங்களின் ஏற்ற இறக்கத்தை கண்ட அரசாங்கள் ஒரு பொதுத்துறை வங்கியை தனியாருக்கு விற்றதாக பெரிய அளவில் தரவுகள் இல்லை. இந்த சூழலில் தற்போது விற்கப்பட இருக்கும் ஐடிபிஐ வங்கியின் நிலை மிகுந்த எதிர்பார்ப்பை, ஏற்படுத்தியுள்ளது. ஐடிபிஐ வங்கியை விற்கும் முயற்சி மோடி அரசின் பொருளாதாரம் மற்றும் அரசியல் சோதனை என்பதில் மாற்றுக்கருத்தில்லை..