பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் என்ன?
நடப்பாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார்.மூத்த பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தலைமையில் இந்த ஆய்வறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடன்கள் வாங்கும் விகிதம் இன்னும் அதிகமாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து இந்தியா முழுமையாக மீண்டுவிட்டதாக கூறியுள்ள அந்த அறிக்கை , ரஷ்யா உக்ரைன் போர்,விலைவாசி உயர்வு, உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து மெல்ல மீண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது. வரும் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7 விழுக்காடாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2024 நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6 முதல் 6.8 விழுக்காடாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.இந்த அளவு உலகளவில் நிலவும் பொருளாதாரம் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு ஏற்றபடி மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பொருளாதாரம் மீண்டு வருவதாக கூறியுள்ள ஆய்வறிக்கை சந்தை முதலீடுகள் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.
உலகளவில், வாங்கும் திறனில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளதாகவும் தனியார் நுகர்வு மூலம் அதிக முதலீடுகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் பணியிடங்களுக்கு திரும்பியுள்ளதால் நல்ல வளர்ச்சி இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கடன் அளிக்கும் அளவு மிகவும் அதிகம் என்று தெரிவித்துள்ள அந்த அறிக்கை, மூலதன செலவீனம் 63.4% அதிகரித்துள்ளதாக கூறியுள்ள அறிக்கை,நடப்பு கணக்கு பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி துறையில் வளர்ச்சி 2022 நிதியாண்டில் அதிகம் காணப்பட்டதாகவும், 2023 நிதியாண்டின் முதல் அரையாண்டில் இது வேகமெடுக்கும் என்றும்,மின்சாதன உற்பத்தி 3 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் 2019ம் ஆண்டை விட இது அதிகம் என்றும் தெரிவித்துள்ளது. சமூகம் சார்ந்த உற்பத்தி,கட்டமைப்பு,வேலைவாய்ப்பின்மை குறைவதாகவும்,கல்வி,சுகாதாரம்,விவாசாயம், தொழில்துறை ஆகியவற்றில் நிலையான வளர்ச்சி காணப்பட்டுள்ளதாகவும்,
2023 நிதியாண்டில் சேவை துறையில் வளர்ச்சி 9.1% ஆக உள்ளதாகவும், இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியில் யுபிஐ பரிவர்த்தனைகள் 121%வளர்ச்சி கண்டுள்ளதாகவும்,இந்தியாவில் 98% பேர் ஒயர் இல்லாத செல்போன் சேவையை பெறுவதாகவும், 2015 முதல் 2021 வரை ,கிராமபகுதிகளில் இணைய வசதி 200% உயர்ந்துள்ளதாகவும் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.