பாவம் பங்காளிக்கு என்னாச்சி…
சண்டையிட்டு கெடுப்பதும் ஒரு ரகம்..கொடுத்து கெடுப்பது மற்றொரு மோசமான ரகம். இதில் சீனா இரண்டாம் ரகம். வடிவேலு சொல்லும் பாணியில் சீனா கால்வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடிதான் போல..இந்தியாவுக்கு பக்கத்து நாடுகளான இலங்கைக்கும்,பாகிஸ்தானுக்கும் அதிக தொகையை கடனாக தந்துள்ள சீனா, பாகிஸ்தானை வளரவே விடவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. மேலும் அதற்குள் அந்நாட்டு அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்ததால் அந்நாட்டு நிலவரம் சற்று மோசமாகத்தான் உள்ளது. கிரிகெட் வீரர் இம்ரான் கான் அசந்த நேரத்தில் ஷெபாஷ் செரீப் ஆட்சியை கைப்பற்றிவிட்டார். இந்தியாவுக்கு சாதகமாகவே பேசும் ஷெபாஷ் ஷெரீப் அரசுக்கு அந்நாட்டில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் அந்த நாட்டு அரசாங்க கஜானா வெகுவாக காலியாகி வருகிறது.அந்நாட்டில் வெளிநாட்டு பண கையிருப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.ஜனவரி 27ம் தேதி நிலவரப்படி,நாட்டின் அந்நிய கையிருப்பு 3.09 பில்லியன் டாலராக உள்ளது. வெளிநாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்றால் இன்னும் 3 வாரத்துக்கு மட்டுமே பாகிஸ்தான் அரசால் சமாளிக்க முடியும். கடந்தாண்டு டிசம்பர் நிலவரப்படி இந்தியாவின் வெளிநாட்டு பண கையிருப்பு 563பில்லியன் டாலராக உள்ளது. இது வெளிநாடுகளில் இருந்து தற்போது வாங்கும் அதே வேகத்தில், அதே அளவில் பொருட்களை வாங்கினாலும் இன்னும் 9.3 மாதங்களுக்கு தாங்கும் என்கிறது புள்ளி விவரம்.